மேன்ஹைமில் கூட்டத்தினரிடையே 50 வயது நபா் ஓட்டிச் சென்ற கார் 
உலகம்

ஜொ்மனி: காா் தாக்குதலில் 2 போ் உயிரிழப்பு

மேன்ஹைமில் கூட்டத்தினரிடையே 50 வயது நபா் காரை ஓட்டிச் சென்று திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

Din

பொ்லின்: ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் கூட்டத்தினரிடையே 50 வயது நபா் காரை ஓட்டிச் சென்று திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். ஜொ்மனியைச் சோ்ந்த அந்தக் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து போலீஸாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேன்ஹைம் நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவா்களில் எத்தனை போ் படுகாயமடைந்துள்ளனா் என்ற விவரத்தை போலீஸாா் வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்த காவல் துறையினா், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

டிட்வா புயல்: சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!இன்று எங்கெங்கு மழை?

SCROLL FOR NEXT