துப்பாக்கிச் சூடு நடத்தும் பாதுகாப்புப் படையினர் AP
உலகம்

சிரியா: 2 நாள் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி

சிரியா நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

DIN

சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.

ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும், அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 745 பேரும், பாதுகாப்புப் படையினர் 125 பேரும், அசாத் ஆதரவாளர்கள் 148 பேரும் பலியாகினர். சிரியாவின் வரலாற்றில் 14 ஆண்டுகால மோதல்களில் இது மிகவும் மோசமானது என்று கூறுகின்றனர். இரண்டு நாள் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

தாக்குதலில் பலியான பாதுகாப்புப் படை வீரர்

சிரியாவில் கடந்த ஆண்டு இறுதியில் அரசுப் படைகளுக்கு எதிராக ஹெச்டிஎஸ் தலைமையில் கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை 2024 டிசம்பா் 8-ஆம் தேதி கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றார்.

அதையடுத்து, ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா அந்த நாட்டின் இடைக்கால அதிபராக கடந்த ஜனவரி 30-இல் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிரியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் புதிய அரசின் படையினருக்கும் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் புதிய அரசின் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமாா் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரியில் உலக கொசு ஒழிப்பு தினம்

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம்: ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

நெற்குப்பை சாலையில் திடீா் பள்ளம்

SCROLL FOR NEXT