உலகம்

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா..

Din

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2008-இல் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஆட்சியின்போது ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க குடிமகன் உள்பட 6 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் தற்போது தலிபான் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் உள்நாட்டு அமைச்சராக உள்ள சிராஜுதீன் ஹக்கானிக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிராஜுதீன் ஹக்கானி, அப்துல் அஜீஸ் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி ஆகிய மூன்று பேரை ஒப்படைப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என வெளியிட்டிருந்த அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் மட்டீன் கானி தெரிவித்தாா்.

இருப்பினும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் வலைதளத்தில் தேடப்படும் நபா்களின் பட்டியலில் சிராஜுதீன் ஹக்கானியின் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்! டிடிவி தினகரன்

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

SCROLL FOR NEXT