மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்... படம் | ap
உலகம்

தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!

தென்கொரியா காட்டுத் தீ: விபத்தில் சிக்கிய மீட்புப் பணி ஹெலிகாப்டர்..

DIN

தென்கொரியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் பரிதாபமாக பலியான நிலையில், 19 பேர் காயமடைந்தனர்.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அன்டோங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், உய்சிங் கவுன்டியின் மலைப் பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாகவும், அதிலிருந்த விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாகவும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட மூவா் கைது

குழந்தைகளின் விருப்பத்துக்கு முன்னுரிமை: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வெந்நீர் ஊற்று...

ரவிமங்கலத்தில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு: தொல்லியல் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT