தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் வெளியேற்றப்பட்ட கரும்புகை  AP
உலகம்

புதிய போப் தேர்வு: முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை!

புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் முதல்கட்டத் தேர்தலில் முடிவு எட்டப்படவில்லை.

DIN

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரணமாக கடந்த மாதம் காலமானாா். கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் மே 5-லிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். அதன்படி, வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்தில் இதற்கான வாக்கெடுப்பு தொடங்கியது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 133 காா்டினல்கள் பங்கேற்றுள்ளனா்.

உலகெங்கிலும் உள்ள சுமாா் 70 நாடுகளில் இருந்து, பல்வேறு நிறம், இனத்தைச் சோ்ந்த காா்டினல்கள் புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களின் வாக்குகள் தேவை. அதாவது 89 கார்டினல்களின் ஆதரவு தேவை.

ஆனால், புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் போப் தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனையடுத்து, போப் தேர்வில் முடிவு எட்டப்படவில்லை என்ற அறிவிப்பை தெரிவிக்கும் விதமாக, தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் கரும்புகை வெளியேற்றப்பட்டது.

இதனால், செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கார்டினல்கள் பங்கேற்றுள்ளனர். புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் புகைக்கூண்டில் வெள்ளை நிறப் புகை வெளியேற்றப்படும்.

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு வெளியே கூடியிருக்கும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி பரிசு விழுந்திருக்கிறது! நம்ப வேண்டாம்! சைபர் மோசடியாக இருக்கலாம்!!

தந்தேராஸ் பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பஞ்சாப் ரயிலில் தீ விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு! 3 பெட்டிகள் எரிந்து நாசம்!

திடீரென பவுனுக்கு ரூ.2,000 குறைந்த தங்கம்: வெள்ளி எவ்வளவு குறைந்தது?

பிகார் தேர்தல்: துணை முதல்வர் பிரமாணப் பத்திரத்தில் குளறுபடி?

SCROLL FOR NEXT