கலிஃபோர்னியா ஏரி Center-Center-Bangalore
உலகம்

130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி..

கலிஃபோர்னியாவில் 130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி விவசாய நிலங்களை மூழ்கடித்துள்ளது.

DIN

கலிஃபோர்னியாவின் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் தற்போது உருவான இந்த ஏரி சுமார் 94,000 ஏக்கர் வேளாண் நிலங்களை மூழ்கடித்துள்ளது.

கடந்த 19ஆம் நூற்றாண்டில், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்பாசனத் திட்டங்களால் காணாமல் போயிருந்த துலாரே ஏரி, சுமார் 100 மைல் நீளமும், 30 மைல் அகலத்துடன் பரந்து விரிந்திருந்தது.

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியும், ஏரிக்கு வரும் நீர்ப்பாதைகளும் அழிக்கப்பட்டு, நூறு ஆண்டுகளுக்கும் மேல் காணாமல் போயிருந்த ஏரி தற்போது மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது.

மிசிசிபி ஆற்றின் நீரினால் நிரம்பி வந்த துலாரே ஏரி, நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கியிருந்தது. தற்போது, மிகப் பெரிய பனிப்பாறை உருகி 130 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஏரி உருவாகியிருப்பதால், சுமார் 94,000 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மூதாதையர்கள் மிகப்பெரிய முயற்சி எடுத்து, நீர்நிலைகளான ஏரிகள் மற்றும் அவற்றுக்கு தண்ணீரைக் கொண்டு வரும் பாதைகளையும் உருவாக்கி நீர்வழித்தடங்களை அமைத்திருந்தனர். அனைத்தும் தற்கால மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத்தால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன.

ஆனால், தற்போது பனிப்பாறை உருகியதால் உருவான தண்ணீர் இந்த ஏரியில் நிரம்பி மீண்டும் பேய் ஏரி உருவானதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியை சந்தித்து தில்லி முதல்வா் தீபாவளி வாழ்த்து

காவலா் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் முதல்வா் அஞ்சலி, 175 பேருக்கு பணி நியமன ஆணை

பிகாா்: இந்தியா கூட்டணியில் முரண்பாடு - பல தொகுதிகளில் எதிா்த்து போட்டி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசின் முயற்சியை தடுக்க வேண்டும்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திமுகவினா் இன்று ஆலோசனை

SCROLL FOR NEXT