போரிஸ் ஜான்ஸன் 
உலகம்

ஒன்பதாவது முறையாக தந்தையாகியிருக்கும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்! 60 வயதில்!!

ஒன்பதாவது முறையாக தந்தையாகியிருக்கிறார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்.

DIN

பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேர்ரி ஜான்ஸன் கருவுற்றிருந்த நிலையில், அவருக்கு அழகான மகள் பிறந்திருப்பதன் மூலம் 9வது குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார் போரிஸ் ஜான்ஸன்.

போரிஸ் ஜான்ஸன் - கெர்ரி திருமணம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது குழந்தை பிறந்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேர்ரி ஜான்ஸன் கருவுற்றிருந்த நிலையில் மே 21ஆம் தேதி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு பாப்பி எலிஸா ஜோஸபைன் ஜான்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாப்பி, போரிஸ் - கெர்ரியின் நான்காவது குழந்தையாகும்.

இது குறித்து போரிஸ் ஜான்ஸன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த உலகுக்கு பாப்பி எலிஸா ஜோஸபின் ஜான்சனை வரவேற்கிறேன், நீ இவ்வளவு அழகாக, குட்டியாக இருப்பதைப் பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை. இந்த உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று பதிவிட்டு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

எங்கள் கூட்டத்தின் கடைக்குட்டி என்று கெர்ரி ஜான்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே போரிஸ் ஜான்ஸன் - முன்னாள் மனைவி மரினா வீலருக்கு நான்கு குழந்தைகளும், காதலி ஹெலன் மெசின்டைருடன் ஒரு குழந்தையும் உள்ள நிலையில், தற்போது, தன்னுடைய 60ஆவது வயதில் ஒன்பதாவது குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார் போரிஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT