எலான் மஸ்க் கோப்புப் படம்
உலகம்

டிரம்ப் அரசின் முக்கிய மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு!

அமெரிக்க அரசின் மசோதாவை மஸ்க் விமர்சித்திருப்பது பற்றி...

DIN

அமெரிக்க அரசு கொண்டுவந்த புதிய மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவை விமர்சித்த 24 மணிநேரத்தில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மசோதா பல்வேறு பொருளாதார செலவீனங்களை மாற்றி அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் அதிபர் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மசோதாவில் ட்ரில்லியன் டாலர் வரிச்சலுகை என்பது பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க ஊடகத்தில் வெளியான மஸ்க்கின் நேர்க்காணலில், மசோதா குறித்து அவர் பேசியதாவது:

”இதனை அழகான மசோதா என்று அழைப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த மசோதாவில் வரி குறைப்புக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடியேற்ற அமலாக்கம் இருக்கின்றன.

அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும் வகையிலும், அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் பணியை குறைமதிப்பீடு செய்யும் வகையிலும் அமைகிறது.

இந்த மசோதா பெரிதாகவோ அல்லது அழகாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டும் சேர்ந்து இருக்குமா எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைவராக பதவி வகிக்க திட்டமிடப்பட்ட நேரம் நிறைவடைந்துவிட்டதாக மஸ்க் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் புதிய நிறுத்தங்கள்!

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி

SCROLL FOR NEXT