வாடிகன் நகரில், போப் பதினான்காம் லியோவை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அரசு முறைப் பயணமாக நேற்று (நவ. 5) வாடிகன் நகரத்துக்குச் சென்றடைந்தார். இதையடுத்து, புனித மேரி தேவாலயத்தில் உள்ள மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறையின் மீது மலர் வைத்து அவர் மரியாதைச் செலுத்தினார்.
அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் அப்பாஸ், பாலஸ்தீன மக்களுக்காக போப் பிரான்சிஸ் செய்தவற்றை மறக்க முடியாது எனவும், யாரும் கூறாமலே அவர் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தார் எனவும் பேசியுள்ளார்.
இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவும் வாடிகன் நகரத்தின் தற்போதைய தலைவருமான போப் பதினான்காம் லியோவை, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் முதல்முறையாக இன்று காலை நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பில், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மறைந்த போப் பிரான்சிஸ் போலவே கடந்த மே மாதம் பதவியேற்ற போப் பதினான்காம் லியோ, உலக அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகின் முதல் டிரில்லியன் டாலர் சம்பளம்! எலான் மஸ்க் கோரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.