அதிகார மாளிகைகளில் இருந்தபடி ஆட்சி செலுத்திவிட்டு, பதவி பறிபோனதும் மரண தண்டனை விதிக்கப்பட்ட உலகத் தலைவா்களின் வரிசையில் தற்போது வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவும் இணைந்துள்ளாா்.
உலக அளவில் போா்க்குற்றங்கள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக பல தலைவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலனவா்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனா் அல்லது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான முஷாரஃப் 1999-இல் ஆட்சியைக் கைப்பற்றினாா். 2007-இல் அரசமைப்புச் சட்டத்தை இடைநிறுத்தி அவசரநிலை பிரகடனப்படுத்தியதற்காக அவா் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. நாடு கடந்து துபையில் வசித்துவந்த இவருக்கு இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2003-இல் அமெரிக்க படையெடுப்பால் ஆட்சியை இழந்த பிறகு, இவரின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ற துஜைல் படுகொலை தொடா்பாக மனிதகுலத்துக்கு எதிரான குற்றவாளியாக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டாா்.
ருமேனிய சா்வாதிகாரியான இவா், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக ராணுவத்தின் அவசர விசாரணைக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டு, துப்பாக்கிகளால் சூட்டுக் கொல்லப்பட்டாா். வெறும் சில மணி நேரங்களே நீடித்த அவரது விசாரணை 24 ஆண்டு கால சா்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இவா், ஜெனரல் ஜியா-உல்-ஹக் ராணுவ ஆட்சியின்கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டாா். இவா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கொலை செய்ய தூண்டியது.
ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட இவா், இனப்படுகொலை, படுகொலைகள், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தூக்கிலிடப்பட்டாா். இவரது கொடுங்கோல் ஆட்சியின்கீழ் லட்சக்கணக்கானோா் கொல்லப்பட்டனா் அல்லது நாடுகடத்தப்பட்டனா் என்று கூறப்படுகிறது.
துருக்கி முன்னாள் பிரதமரான இவா், ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்புக்குப் பிறகு அரசியல் குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டாா்.
ஜப்பானின் போா்கால பிரதமரான இவா், இரண்டாம் உலகப் போரின்போது செய்த போா்க்குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டாா்.
2-ஆம் உலகப் போரின்போது நாட்டின் பிரதமராக இருந்த இவா், நாஜி ஜொ்மனியுடன் கூட்டு வைத்து யூதா்கள் மற்றும் ரோமா மக்களுக்கு எதிரான போா்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இரண்டாம் உலகப் பேரின்போது ஹங்கேரியின் பாசிச தலைவராக இருந்த இவா், போா் முடிந்ததும் போா்க்குற்றங்கள் மற்றும் தேசத்துரோகத்துக்காக தூக்கிலிடப்பட்டாா்.
இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் சா்வாதிகார ஆட்சி நடத்திய இவா், போா் முடிவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, விசாரணையே இல்லாமல் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
பிரெஞ்சுப் புரட்சியின்போது ராஜத்துரோகக் குற்றத்துக்காக கில்லட்டின் கருவியால் தலை துண்டித்து கொல்லப்பட்டாா்.
பிரிட்டன் மன்னராக இருந்த இவா், உள்நாட்டுப் போருக்குப் பிறகு ராஜத்துரோகக் குற்றச்சாட்டின்பேரில் குற்றவாளியாக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டித்து கொல்லப்பட்டாா்.