காஸாவுடன் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததன் மத்தியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
இஸ்ரேல் - காஸா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இஸ்ரேல் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை.
இதனிடையே, போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தொடர்ந்து முயற்சித்து வந்தநிலையில், தற்போது டிரம்ப்பின் குரலுக்கு இஸ்ரேல் செவிசாய்த்துள்ளது.
காஸாவுடனான போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், வெள்ளிக்கிழமை இரவில் காஸா பகுதிகளில் வான்வெளித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானதுடன், பலரும் காயமடைந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட வீடுகளும் குண்டுவெடிப்பால் அழிக்கப்பட்டன.
காஸாவுடன் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததன் மத்தியில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொலை - வெளியான திடுக் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.