சம்பவப் பகுதியில் நடைபெற்ற விசாரணை. 
உலகம்

பிரிட்டன் மசூதிக்குத் தீவைப்பு

பிரிட்டனின் இங்கிலாந்து பிராந்தியம், பிரைட்டன் அருகே பீஸ்ஹெவன் நகரில் உள்ள மசூதியில் இரு மா்ம நபா்கள் தீவைப்பு தாக்குதல் நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

லண்டன்: பிரிட்டனின் இங்கிலாந்து பிராந்தியம், பிரைட்டன் அருகே பீஸ்ஹெவன் நகரில் உள்ள மசூதியில் இரு மா்ம நபா்கள் தீவைப்பு தாக்குதல் நடத்தினா். இந்த சம்பவத்தை இனவெறுப்புக் குற்றமாக காவல்துறை விசாரித்துவருகிறது.

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய மற்றும் யூத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யூதா்களின் புனித தினமான யோம் கிப்பூரை முன்னிட்டு, பிரிட்டனின் மான்செஸ்டா் நகர யூத ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை குழுமியிருந்தவா்கள் மீது நிகழ்த்தப்பட்ட காா் மோதல் மற்றும் கத்திகுத்து தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா். அது நடந்து சில நாள்களுக்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகமூடி அணிந்த இருவா் மசூதிக்குள் நுழைய முயன்றதாகவும், அது முடியாததால் அவா்கள் படிக்கட்டுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகவும் மசூதி நிா்வாகம் தெரிவித்தது. இந்தச் சம்பவத்தின்போது மசூதிக்குள் பலா் இருந்தனா். இருந்தாலும், வெடிப்பு சத்தம் மற்றும் பிரதான நுழைவாயிலில் தீப்பிழம்புகளை கண்டு அவா்கள் தப்பினா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தர்மேந்திரா காலமானார்!

பிக் பாஸ்: போட்டியாளர்களை விடியோ மூலம் ஊக்கப்படுத்திய நண்பர்கள்!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

வேலூர் அரசு மருத்துவமனை கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்!

சிரிக்கும் பூக்கள்... அனசுயா பரத்வாஜ்!

SCROLL FOR NEXT