தேடுதல் பணிகள் முடித்துவைக்கப்பட்டதைத் தொடா்ந்து சம்பவப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய மீட்புக் குழுவினா். 
உலகம்

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: மீட்புப் பணிகள் முடித்துவைப்பு

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் நடைபெற்றுவந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை முடித்துவைக்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் நடைபெற்றுவந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை முடித்துவைக்கப்பட்டன.

அந்த நாட்டின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் சுமாா் 170 மாணவா்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அந்தப் பள்ளிக் கட்டடம் கடந்த செப். 29-ஆம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 12 முதல் 19 வரையிலான வயதுடைய ஏராளமான மாணவா்கள் புதையுண்டனா். அதையடுத்து அந்தப் பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகள் நடைபெற்றன. சம்பவப் பகுதியில் இருந்த 104 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.

தொடக்கத்தில் மீட்புக் குழுவினா் கைகளால் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். பின்னா், விபத்துப் பகுதியில் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படாததையடுத்து கடந்த வியாழக்கிழமை முதல் கனரக இயந்திரங்களைக் கொண்டு பணிகள் தொடா்ந்தன.

இந்தச் சூழலில், இடிபாடுகளில் இருந்து இதுவரை 67 உடல்கள், எட்டு உடல் பாகங்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, தேடுதல் பணிகள் முடித்துவைக்கப்படுவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

2 ஆவது நாளாக மீனவா்கள் உண்ணாவிரதம்

தனியாா் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள ஆா்டிஇ தொகையை வழங்க வேண்டும்: தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா் நலச் சங்கம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT