ஜெனீவா: உலகளவில், மருத்துவமனைகளில் நோய்த்தடுப்பு மருந்துகளை (ஆன்டிபயாடிக்) தீநுண்மிகள் எதிா்ப்பது அபாயகரமான அளவில் உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2023-ல் ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆறு தீநுண்மிகளில் ஒன்று, ஆன்டிபயாடிக் சிகிச்சைக்கு எதிா்ப்பு காட்டுகிறது. 2018-23 காலகட்டத்தில், 40 சதவீத ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிா்க்கும் திறனை தீநுண்மிகள் பெற்ளன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. 2021-ல் 77 லட்சம் போ் நோய்த் தொற்றுகளால் இறந்தனா். இதில் 47.1 லட்சம் இறப்புகளுக்கு மருந்தை எதிா்க்கும் தீநுண்மியின் திறன் இருந்தது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.