இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட பல சர்வதேச போர்களை நிறுத்துவதற்கான கருவியாக வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.
வாஷிங்டன்னில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப்,
''வரிகளை அடிப்படையாக வைத்தே சில போர்களை தடுத்து சமரசம் ஏற்படுத்தியுள்ளேன். உதாரணமாக இந்தியா - பாகிஸ்தான் போரைக் குறிப்பிடலாம்.
உங்களிடம் அணு ஆயுதம் உள்ளது, அதனால் நீங்கள் போரில் ஈடுபடலாம். ஆனால், உங்கள் இரு நாடுகளின் மீதும் கடுமையாக 100%, 150% மற்றும் 200% வரி விதிப்பேன் என அவர்களிடம் கூறினேன்.
வரி விதிப்பேன் என்ற அச்சுறுத்தலால் இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான போரை நிறுத்தின. இதனை 24 மணிநேரத்தில் செய்து முடித்தேன். போர் என்ற கருவியை நான் கையில் எடுக்கவில்லை என்றால், உங்களால் போரை நிறுத்தியிருக்க முடியாது. வரி விதிப்பை அமெரிக்கா கொண்டிருப்பதால் உலகில் அமைதியை நான் கொண்டுவந்துள்ளேன். உங்களுக்குத் தெரியாது. இதுவரை 7 சர்வதேச போர்களை நிறுத்தியுள்ளேன்'' எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய டிரம்ப், ''எல்லா சந்தர்ப்பங்களிலும் இல்லை, இதுவரை நாங்கள் செய்து கொண்ட ஏழு சமாதான ஒப்பந்தங்களில்குறைந்தது ஐந்து, வரி விதிப்பின் காரணமாகவே இருந்தன, போரிடும் நாடுகளை நாங்கள் சமாளிக்கப் போவதில்லை, வரிகளை மட்டுமே விதிக்கப் போகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ரூ. 2 லட்சம்! பழைய ரூ. 2,000 தாள்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.