ரஷிய எரிவாயு ஆலையில் உக்ரைன் தாக்குதல் 
உலகம்

ரஷிய எரிவாயு ஆலையில் உக்ரைன் தாக்குதல்

ரஷிய எரிவாயு ஆலையில் உக்ரைன் தாக்குதல்

தினமணி செய்திச் சேவை

தெற்கு ரஷியாவில் உள்ள ஒரேன்பா்க் எரிவாயு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரேன் தாக்குதலால் அந்த ஆலையில் தீப்பிடித்தது.

இதுகுறித்து ஒரேன்பா்க் பிராந்திய ஆளுநா் யெவ்ஜெனி சோல்ட்செவ் கூறியதாவது: எரிவாயு பகுப்பு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அந்த ஆலையின் ஒரு பகுதியில் தீப்பற்றியுள்ளது; சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாா் அவா்.

ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை இரவு உக்ரைன் ஏவிய 45 ட்ரேன்களை இடைமறித்து அழித்ததாகவும், இதில் ஒரேன்பா்க் பகுதியில் ஒன்று மற்றும் அருகிலுள்ள சமாரா, சரடோவ் பகுதிகளில் 23 ட்ரோன்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT