பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உள்பட 5 பேர் பலியானதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வடக்கு பாகிஸ்தானில் கில்கிட் - பல்திஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று(செப். 1) வழக்கமான சோதனையின்போது கீழே விழுந்து தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள் மற்றும் 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் பயணித்த நிலையில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஃபைசுல்லா ஃபராக் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற விபத்துகள் பாகிஸ்தானில் அடிக்கடி நடைபெறுகின்றன. கடந்த மாதம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமேற்கு பஜாவுர் பகுதிக்கு நிவாரணப் பொருள்களை கொண்டு சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையில் விபத்துக்குள்ளானதில் இருந்த 5 பேரும் பலியாகினர். 2024 செப்டம்பரில் இயந்திரக் கோளாறு காரணமாக மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.