காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உள்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் காஸா மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது.
போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் கிடைத்து வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே அங்கு பஞ்ச நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. இதில் 130 பேர் குழந்தைகள்.
இன்று மட்டும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் உணவு மையங்களை நோக்கிச் சென்றவர்கள். 3 குழந்தைகள் உள்பட 13 பேர் உணவின்றி இறந்துள்ளனர்.
காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா மீதான இஸ்ரேலின் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக பெல்ஜியம் இம்மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் அவையில் அறிவிக்க உள்ளது. மேலும் இஸ்ரேல் மீது தடை விதிக்கவும் முடிவெடுத்துள்ளது.
காஸாவுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க 20.1 மில்லியன் டாலர் வழங்குவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகள் காஸாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.