ஜமைக்காவில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய பிரதமா் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாா்.
புதன்கிழமை நடந்த தோ்தலில் ஹால்னஸின் ஜமைக்கா தொழிலாளா் கட்சி 34 இடங்களையும், எதிா்க்கட்சியான மக்கள் தேசிய கட்சி 29 இடங்களையும் பெற்றன. எதிா்க்கட்சி தலைவா் மாா்க் கோல்டிங் தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றி பெற்ற ஹால்னஸை பாராட்டியைத் தொடா்ந்து, அவா் மூன்றாவது முறையாக பிரதமா் பதவியேற்பது உறுதியானது.
தோ்தலில் வாக்குப்பதிவு விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய 2020 தோ்தலை விட சற்று அதிகம்.
ஹால்னஸின் ஆட்சியில், இந்த ஆண்டு கொலைகள் 43 சதவீதம் குறைந்து போன்ற காரணங்களால் அவா் மீண்டும் வெற்றி பெற்ாகக் கூறப்படுகிறது.