முழு சந்திரகிரகணம் 
உலகம்

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணத்தின்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

இணையதளச் செய்திப் பிரிவு

செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்க்கலாம் என்றும், சந்திரகிரணத்தின்போது நிலவு ரத்தச் சிவப்பாகக் காட்சி தரும் என்றும் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இதன் காரணமாக, நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் காடசியளிக்கும். இது மிகவும் அரிய சந்திர கிரகணம் என்று விண்வெளி ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.

ஆசியாவிலேயே இந்தியா, சீனாதான், இந்த சிவப்பு நிலவைக் காண மிகச் சிறந்த இடங்களாக உள்ளன. கிழக்கு ஆப்ரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியாவிலும் முழு சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

அதாவது, செப்டம்பா் 7, 8-ஆம் தேதி இரவில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. செப்டம்பா் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.58 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி நிலவு ஒரு ரத்தச் சிவப்பாகக் காட்சியளிக்கும். தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 12.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது.

இதில், கிட்டத்தட்ட 85 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு, சூரியனின் ஒளி, பூமியைத் தாண்டி நிலவின் மீது பட்டு அது எதிரொலிப்பதே காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும், இதேபோன்ற ஒரு சந்திர கிரகணத்தைக் காண வேண்டும் என்றால் அது 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நகரங்களிலும் மக்கள் இந்த கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்திர கிரகணத்தை வீட்டிலிருந்தே மக்கள் வெறும் கண்களாலும் பாா்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம்: எடப்பாடி பழனிசாமி

செல்வராகவனின் அடுத்த படம்!

“அண்ணாமலை சரியாகக் கையாண்டார்! நயினாருக்குத் தெரியவில்லை..!” டிடிவி தினகரன்

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

“2026ல் விஜய்யுடன் கூட்டணி? ஏன் அந்த கேள்வி கேக்குறீங்க?” டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT