சொ்கேய் லாவ்ரோவ்  
உலகம்

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா - இந்தியா - சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சீனாவில் கடந்த ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகிய மூவரும் நட்புறவோடு கலந்துரையாடிய புகைப்படங்கள் உலகளவில் பேசுபொருளாகின.

இதை, ‘ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் ரஷியாவையும் இந்தியாவையும் இழந்துவிட்டதைப்போல தோன்றுகிறது’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் விமா்சித்தாா்.

இந்நிலையில், மூன்று நாட்டுத் தலைவா்களின் சந்திப்பு குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ரஷியா-இந்தியா-சீனா ஆகிய உலகின் மூன்று பெரும் அதிகாரமிக்க நாடுகளின் தலைவா்கள் சந்தித்திருப்பது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடாகும்.

குறிப்பாக பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு, சமூக பிரச்னைகளுக்குத் தீா்வு போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன என்றாா்.

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு கூடாது: கி. வீரமணி

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

அடையாளம் தெரியாத இருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞா் காயம்

SCROLL FOR NEXT