புதிய விடியோ 
உலகம்

சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ!

சார்லி கிர்க் கொலையாளியின் புதிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

யூடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது.

யூடா பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பல்கலைக்கழகத்தின் ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்து துப்பாக்கித் தோட்டாக்களையும் கொலைக்குப் பயன்படுத்திய மிக நவீன துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். கட்டடத்தின் மேல்கூரையிலிருந்த, குற்றவாளி துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான தடயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு கை மற்றும் ஷூவின் தடங்களும் கிடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யூடா மக்கள் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறுகையில், யூடா மாகாண பல்கலைக்கழகத்தின் மாடி வழியாக ஓடி வந்த கொலையாளி, அங்கிருந்து வெளியே குதித்து ஓடும் காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கொடி மற்றும் கழுகின் புகைப்படங்கள் அடங்கிய ஆடையை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் இன்னும் தெரியவரவில்லை என்றும், அடர்ந்த மரங்கள் இருந்த பகுதி வழியாகத் தப்பிச் சென்றதகாவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கோதவாடி குளத்தில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம்’

தரமான சாலை அமைக்கக் கோரி மக்கள் மறியல்

குடியரசு துணைத் தலைவா் பாதுகாப்புப் பகுதியில் இருவா் வாகனத்தில் சென்ற விவகாரம்: என்ஐஏ விசாரிக்க வலியுறுத்தல்

மழை, வெள்ள பாதிப்பு: எம்எல்ஏ ஜெகன்மூா்த்தி ஆய்வு

ஒா்க் ஷாப்பின் பூட்டை உடைத்து இயந்திரங்கள் திருட்டு

SCROLL FOR NEXT