அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுமந்துசென்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க், உடா மாகாண பல்கலை.யில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரின் கொலைக்கு அமெரிக்காவின் அரசியல் கட்சியினர் அனைவரும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். கொலையாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உடா மாகாணத்தில் இருந்து அரிஸோனா மாகாணத்துக்கு சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் விமானம் மூலம் வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது, அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சார்லி கிர்க்கின் உடலை பாதுகாப்புப் படை வீரர்களுடன் ஜே.டி. வான்ஸும் சுமந்துசென்றார்.
இதேபோல், அரிஸோனாவில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, சார்லி கிர்க்கின் மனைவி எரிக்காவுடன் துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸ் வந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக, சார்லி கிர்க்கின் கொலை குறிப்பிட்டு இது அமெரிக்காவின் இருண்ட காலம் என விமர்சித்த டிரம்ப், அந்நாட்டின் உயரிய ’மெடல் ஆஃப் ஃபிரீடம்’ விருதை சார்லிக்கு வழங்குவதாக அறிவித்தார்.
சார்லி கிர்க், ஜே.டி. வான்ஸின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.