பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஒரே நாளில் நடைபெற்ற 2 வெவ்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், நேற்று (செப்.18) துணை ராணுவப் படைகளின் பேரணியின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்றை ஓட்டி வந்து மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று, பலூசிஸ்தான் மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 6 தொழிலாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்கள் முன்பு, பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவில் அரசியல் கட்சியின் பேரணியில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வளம் நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானின் பூர்வக்குடிகளான பலூச் இன மக்கள் மீதான அரசுப் படைகளின் வன்முறைக்கு எதிராக பலூச் போராளிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாள வன்முறை: துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை அல்ல! - முன்னாள் பிரதமர் மறுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.