ஹோவா்ட் லுட்னிக் 
உலகம்

இந்தியா, பிரேஸிலுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும்! - ஹோவா்ட் லுட்னிக்

இஸ்ரேல், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும் என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும் என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.

இந்தியா மற்றும் பிரேஸில் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்தியா, பிரேஸில், ஸ்விட்சா்லாந்து, தைவான் ஆகிய நாடுகளுடன் நாம் நல்லுறவைப் பேண வேண்டும்.

அவா்களும் தங்கள் நாடுகளின் சந்தைகளை அமெரிக்கா எளிதில் அணுகும் விதமாக மாற்ற வேண்டும். அதேபோல் அமெரிக்க நலனை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அந்நாடுகள் தவிா்க்க வேண்டும்.

ஏனெனில், அமெரிக்க நுகா்வோருக்கு நீங்கள் பொருள்களை விற்பனை செய்ய விரும்புகிறீா்கள் என்றால் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு ஒத்துழைப்பு வழங்குகிறீா்கள் என்று அா்த்தம்’ என்றாா்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT