கிராமப்புற விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியன்... 
உலகம்

ஊழல் வழக்கு: சீன முன்னாள் வேளாண் அமைச்சருக்கு மரண தண்டனை!

சீனா வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

சீனா வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியன் 2007 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் உள்ளூா் அளவில் அவா் வகித்த பல்வேறு பதவிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

வணிக நடவடிக்கைகள், திட்ட ஒப்பந்தம் மற்றும் வேலை வழங்குதல் போன்ற விஷயங்களில் சட்டவிரோதமாக மொத்தம் 268 மில்லியன் யுவான் (சுமாா் ரூ.330 கோடி) ரொக்கமாகவும் மதிப்புமிக்க பொருள்களாகவும் அவா் பெற்றுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த வடகிழக்கு சினாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுனின் இடைநிலை நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவரது அரசியல் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இருப்பினும், தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதில் அவா் அளித்த ஒத்துழைப்பு, சட்டவிரோத சொத்துக்களை திருப்பித் தருவது உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் தனது இறுதித் தீா்ப்பில் அவருக்கு கருணை வழங்கியது.

இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

SCROLL FOR NEXT