நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு நிவாரண பொருள்கள்: இந்தியா உதவி
நிலநடுக்கம் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் நோக்கில், நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
நிலநடுக்கம் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் நோக்கில், நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அண்மையில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோா் உயிரிழந்தனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். இதேபோல் மழை வெள்ளத்தாலும் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு உதவும் நோக்கில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரன்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘சவாலான இக்காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும்.
Advertisement
Advertisement
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. அந்நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கில், சமையல் பொருள்கள், மருந்து பொருள்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் உள்ளிட்டவற்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.