ரஷியா - அமெரிக்கா ஒப்பந்தம் இன்றுடன் முடிவு! மீண்டும் ஓர் அணு ஆயுதப் போட்டியா?
ரஷியா - அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் இன்றுடன் முடிவு
ரஷியா - அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைந்தது.
ரஷியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் நோக்கில், 2010 ஆம் ஆண்டில் நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன்படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.
இந்த ஒப்பந்தம் 2021-ல் காலாவதியாகவிருந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இரு நாடுகளிக்கிடையேயான இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைந்தது. இந்த ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ரஷியா கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்கு அமெரிக்கா பதிலேதும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சீனா அணு ஆயுத வளா்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால், அமெரிக்காவும் தனது ஆயுதக் கிடங்கை அதிகரிக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மீண்டும் ஓர் அணு ஆயுதப் போட்டி உருவாகுமா என்ற கேள்வியும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
Fears of nuclear arms race rise as US - Russia treaty expires
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.