எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துவது பற்றி இந்தியா அறிவிக்கவில்லை! ரஷியா
கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துவது குறித்து ரஷியா கருத்து...
கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திக் கொள்ள இருப்பதாக இதுவரை இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று ரஷியா தெரிவித்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
அத்துடன், ரஷியா கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து ரஷிய அதிபர் மாளிகையில் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியிருப்பதாவது:
”இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் வழங்குவது ரஷியா மட்டுமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். பிற நாடுகளிடம் இருந்தும் இந்த பொருள்களை இந்தியா கொள்முதல் செய்து வருகின்றது. எனவே, இதில் நாங்கள் புதிதாக எதையும் காணவில்லை.
இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முழு சுதந்திரம் உள்ளது. எனினும், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மாஸ்கோவுக்கு வரவில்லை” எனத் தெரிவித்தார்.
India has not said anything about stopping oil trade with Russia!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.