முகப்பு
உலகம்

அரேபிய வளைகுடாவில் தாக்குதல்: ஈரானுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படும் - சவூதி எச்சரிக்கை!

அரேபிய வளைகுடா நாடுகளுக்கு சவூதி அரேபியா ஆதரவு - ஈரானுக்கு கண்டனம்!

Updated On : 28 பிப்ரவரி 2026, 8:18 pm IST
சவூதி எச்சரிக்கை! - ANI
பகிர்:

அரேபிய வளைகுடா நாடுகளுக்கு துணை நிற்கிறோம் என்று ஆதரவுக்கரம் நீட்டியுள்ள சவூதி அரேபியா ஈரானுக்கு kஅடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இஸ்ரேலிலும் ஈரானிலும் அதன் அண்டை நாடுகளிலும் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களுக்கு எதிர்வினையாக அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அரேபிய வளைகுடாவில் அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழி தாக்குதல்களை ஈரான் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரேபிய வளைகுடா நாடுகளுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

‘ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத், ஜோர்டானின் இறையாண்மையை மீறும் செயலில் ஈடுபட்ட ஈரானிய ஆதிக்க நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. மேற்கண்ட சகோதரத்துவ நாடுகளுடன் சவூதி அரேபியா முழு ஆதரவுடன் துனை நிற்கிறது. அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் துணை நிற்கத் தயாராக இருக்கிறோம்.

பிற நாட்டின் இறையாண்மையையும் சர்வதேச சட்ட கொள்கைகளையும் மீறும் தொடர் நடவடிக்கைகளுக்காக ஈரான் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

சர்வதேச சமூகம் இந்த கொடுந்தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்க சவூதி அரேபியா அழைப்பு விடுக்கிறது. பிராந்திய நிலைத்தன்மையும் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் ஈரானின் வர்ம்பு மீறிய செயல்களைத் தடுக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுக்க அழைப்பு விடுக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Saudi Arabia condemns Iranian aggression and expresses solidarity with UAE, Bahrain, Qatar, Kuwait and Jordan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.