மியான்மர் ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் AP
உலகம்

மியான்மர் பொதுத்தேர்தல் முடிவுகள்: ராணுவ ஆதரவு யுஎஸ்டிபி ஆட்சியமைக்கிறது!

மியான்மரில் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடு: ராணுவ ஆதரவு யுஎஸ்டி கட்சி வெற்றி!

இணையதளச் செய்திப் பிரிவு

மியான்மரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ (யுஎஸ்டிபி) பெருவாரியான வெற்றி பெற்றதாக திங்கள்கிழமை(ஜன. 26) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மாற்றாக யுஎஸ்டிபி தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கிறது.

யுஎஸ்டி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாடாளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 61 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 57 இடங்களை யுஎஸ்டிபி கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 290 இடங்களில் யுஎஸ்டிபி வென்றிருப்பதாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மூலம் அறிய முடிகிறது. மேலவை மற்றும் பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட 166 இடங்களையும் சேர்த்து யுஎஸ்டிபி வெற்றி பெற்ற இடங்களையும் கணக்கிட்டால் பெரும்பான்மைக்கு தேவையான 294 இடங்களுக்கும் மேல் அதாவது, 450 இடங்களை யுஎஸ்டிபி கைப்பற்றியிருப்பதால் மியான்மரில் யுஎஸ்டிபி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இந்த வார இறுதிக்குள் வெளியானபின், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களும் ராணுவத்தால் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் கூட்டாகச் சேர்ந்து, மியான்மர் அதிபர் பதவிக்கு மொத்தம் 3 உறுப்பினர்களை முன்மொழிவர். அவர்களில் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்படாத இருவரும் துணை அதிபர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள்.

2021-இல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் (80) அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சி புரிந்துவரும் நிலையில், தோ்தல் வாயிலாக அதிகாரபூா்வமாக அதிபா் பொறுப்பை ஏற்க ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் தீவிரம் காட்டி வருவதால் புதிய அதிபராக மின் ஆங் லயிங் பொறுப்பேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Myanmar's military-backed Union Solidarity and Development Party claimed on Monday that it had won the country's first election since the army seized power in 2021, paving the way for a new government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமபந்தி விருந்து...

பன்றித் தொல்லை; பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா் ஆட்சியர்!

மாநில கடற்கரை கைப்பந்து போட்டி பரிசளிப்பு

மகளிர் பிரீமியர் லீக்கில் முதல் சதம் விளாசி உலக சாதனை!

SCROLL FOR NEXT