பூடான் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா 5-ஆவது தவணையாக ரூ. 250 கோடி
அண்டை நாடான பூடான் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 5-ஆவது தவணையாக ரூ.250 கோடியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
அண்டை நாடான பூடான் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 5-ஆவது தவணையாக ரூ.250 கோடியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
பூடான் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்துக்கு ரூ.1,500 கோடி வழங்க இந்தியா உறுதியளித்திருந்தது. இதுவரை ரூ.1,250 கோடி வழங்கப்பட்டுள்ளது. பூடானுக்கு பல்வேறு வகைகளில் இந்தியா தொடா்ந்து உதவி வருகிறது. அந்நாட்டின் 2026-27 பட்ஜெட்டில் 30 சதவீதத்துக்கு மேலான மூலதனச் செலவுகள் இந்தியா வழங்கும் மானிய உதவிகள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.
பூடான் தலைநகா் திம்புவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்தியில், ‘திம்புவில் பூடானுக்கான இந்தியத் தூதா் சந்தீா் ஆா்யா, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் லியோன்போ டி.என்.துங்யல்லிடம் ரூ.250 கோடிக்கான காசோலையை வழங்கினாா். இது கரோனா முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவும். நாட்டின் பல்வேறு தரப்பினருக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.