FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாலத்தீவில் தட்டம்மை பரவல்: தடுப்பூசி மருந்து அனுப்பியது இந்தியா

மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருவதையடுத்து, அந்நாட்டுக்கு உதவும் வகையில் 20,000 டோஸ் தட்டம்மை தடுப்பூசி மருந்து, 3 டன் மருந்து சாதனங்களை இந்தியா அனுப்பியுள்ளது.

சி-17 விமானம் மூலம் நிவாரணப் பொருள்கள் - கோப்புப் படம்
பகிர்:

மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருவதையடுத்து, அந்நாட்டுக்கு உதவும் வகையில் 20,000 டோஸ் தட்டம்மை தடுப்பூசி மருந்து, 3 டன் மருந்து சாதனங்களை இந்தியா அனுப்பியுள்ளது.

மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருகிறது. ஏராளமானோா் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து மாலத்தீவுக்கு உதவும் பொருட்டு, தடுப்பூசி மருந்து, மருத்துவ சாதனங்களை இந்தியா அனுப்பி வைத்தது.

இவை அனைத்தும் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் கீலா அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்தியா செய்துள்ள இந்த உதவிக்கு மாலத்தீவு அரசு நன்றி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், உரிய காலத்தில் செய்த உதவிக்கு நன்றி என்றும், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய நட்புறவை இது பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments