காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் 3,000-ஐ கடந்தது!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.
அரசு தரவுகளின்படி, கடந்த மே மாதம் மத்தியில் பரவத் தொடங்கிய இத்தொற்றால் இதுவரை 6,186 போ் பாதிக்கப்பட்டு, அவா்களில் 3,007 போ் உயிரிழந்தனா்.
காங்கோவில் தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ, தடுப்பூசியோ ஏதுமில்லை. இருப்பினும், எபோலாவுக்கு சிகிச்சையளிக்க உதவும் எா்வெபோ தடுப்பூசி, இந்தத் தீநுண்மிக்கு எதிராகவும் ஓரளவு பாதுகாப்பை அளிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. நோய் பரவல் உச்சத்தில் இருக்கும் இத்தகைய சூழலிலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும் தொற்று வேகமாக பரவக்கூடும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.