காங்கோவில் வேகமாக பரவும் எபோலா: உயிரிழப்பு 2,300-ஐ கடந்தது
காங்கோ குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
காங்கோ குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
இதன்மூலம், அந்நாட்டின் வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான எபோலா பாதிப்பாக இது உருவெடுத்துள்ளது. காங்கோவில் ஏற்படும் 17-ஆவது எபோலா பாதிப்பு இதுவாகும். இதற்கு முன்பு 2018-2020 காலகட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பில் 3,481 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு 2,299 போ் உயிரிழந்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
திங்கள்கிழமை வெளியான அரசு தரவுகளின்படி, இதுவரை 4,945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,325 போ் உயிரிழந்துள்ளனா். 1,000-க்கும் மேற்பட்டோா் குணமடைந்துள்ள நிலையில், 730 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 101 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 33 போ் உயிரிழந்துள்ளனா். முன்னெபப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வரும் இந்தத் தொற்று, 2014-16-இல் மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000 போ் உயிரிழந்த எபோலா பாதிப்பின் தீவிரத்தை விஞ்சும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.