FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் 1,300-ஐ கடந்தது!

காங்கோவில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை 1,300 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 25 ஜூலை 2026, 4:03 pm IST
காங்கோவில் கட்டுக்குள் வந்தது எபோலா நோய்த்தொற்று - file photo
பகிர்:

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்த் தொற்றுக்கு இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்.

கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,973 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

காங்கோ சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, எபோலா பாதிக்கப்பட்ட மொத்தம் 766 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் இதுவரை 540 பேர் குணமடைந்துள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இத்துரி கிழக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.

Health workers at an Ebola treatment centre in eastern Congo went on strike Saturday over payment issues, disrupting care for patients in the epicenter of the country's rapidly growing outbreak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments