மூன்று வாரங்களில் 1000 பேர் பலி... காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா!
எபோலா பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது பற்றி..
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பரவல் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பலியானோர் எண்ணிக்கை 2,000-ஐக் கடந்துள்ளது.
அல் ஜசீரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளின் படி, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் குறைந்தது 1000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டின் ஐந்து மாகாணங்களில் மொத்தம் 4,381 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 2,011 உயிரிழப்புகளும் அடங்கும்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது. 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பரவலில் 11,310 பேர் உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்புக்கு அடுத்தபடியாக இது இரண்டாவது பெரிய பாதிப்பாக உள்ளது.
Advertisement
Advertisement
மூத்த எபோலா ஒருங்கிணைப்பாளர் ஜூலியன் ஹார்னிஸ் வெளியிட்ட என்ஸ் பதிவில்,
எபோலா தொற்று நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐக் கடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த 20 நாள்களில் உயிரிழந்துள்ளனர்.
உயிர்களைக் காப்பாற்றவும் எபோலாவைக் கட்டுப்படுத்தவும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிவாரணப் பணியாளர்கள், அமைப்புகள், அரசுகள், நன்கொடையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகம் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிகிச்சை மையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அதிகளவில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
எபோலா வைரஸின் ஒரு வகையான புண்டிபுக்யோ வைரஸ் தொற்றால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலாகும். இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட தீவிரமான நோயாகும். தற்போது, புண்டிபுக்யோ வைரஸ் வகையால் ஏற்படும் எபோலா நோயைத் தடுக்கவோ அல்லது சிகிச்சையளிக்கவோ எந்தத் தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ அங்கீகரிக்கப்படவில்லை.
More than 2,000 people have died of Ebola in the Democratic Republic of the Congo (DRC) since its outbreak was declared fewer than three months ago.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.