FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி!

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த தீவிபத்து பற்றி....

5 செப்டம்பர் 2026, 10:03 pm IST
காங்கோ. - கோப்புப்படம்.
பகிர்:

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த தீவிபத்தில் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கோ தலைநகர் கின்ஷாஷாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 பேர் பலியானதாக அப்பகுதியின் மேயர் சனிக்கிழமை தெரிவித்தார். கின்ஷாஷாவின் வடக்கு பகுதியில் உள்ள லிங்வாலா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்து சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இந்த தீவிபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.

குறுகிய நடைபாதைகளில் மக்கள் தீயிலிருந்து தப்பிக்க முயன்றதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், தீவிபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது ஒரு பெரும் துயரம் என்று காங்கோவின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஜாக்குமின் ஷபானி தெரிவித்தார். மேலும் தீ விபத்து நடந்த இடத்தை சனிக்கிழமை நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து லிங்வாலாவின் மேயர் கூறுகையில், தற்காலிக பலி எண்ணிக்கை 22 ஆக உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவித்தார். கின்ஷாஷாவின் அடர்ந்த குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற உயிரிழப்பை ஏற்படுத்தும் தீவிபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

summary

At least 22 people were killed in a fire at a wedding party in Congo's capital, Kinshasa, the regional mayor said Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments