வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்! மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா?
வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சலில் இருந்து தப்பிக்க மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது பற்றி..
நாடு முழுவதும் எச்1என்1 என்ற பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தில்லியில் சுமார் 2,300 பேரும், கர்நாடகத்தில் 400 பேர் வரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருவமழைக் காலத்தில் ஏற்படும் தொற்று பாதிப்பு மற்றும் எச்1என்1 பாதிப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமே தவிர, அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கும்போது மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Advertisement
Advertisement
பன்றிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணியலாமா என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கரோனாவுக்கான தடுப்பு முறைகள் பன்றிக் காய்ச்சலுக்கு பொருந்தாது என்கிறார்கள் சுகாதாரத் துறை நிபுணர்கள்.
பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்களின் எச்சில் துளி போன்றவற்றால் பரவும் என்பதால், அது காற்றில் பயணித்து வருவதற்கான வாய்ப்பு குறைவுதான். நோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமானது என்று அறிவுறுத்தப்படுகிறது.
எப்படி பரவுகிறது?
பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் இருமினாலோ, தும்மினாலோ பேசும்போதோ அவர்களது எச்சில் அல்லது சளி மூலம் மற்றவர்களுக்கு இது பரவலாம். எனவே, அருகில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.