500 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் நல பாதிப்பு! பெங்களூர் பள்ளி மூடல்! 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்
500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பெங்களூர் பள்ளி மூடப்பட்டது பற்றி..
காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பிரச்னைகளால், பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 500 மாணவர்களும் 21 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நைலயில், பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பள்ளி வளாகம் முழுவதும் திடீரென காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் மிக வேகமாக பரவியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது, பள்ளியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பள்ளி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும், நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதும் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வெளியே சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவோருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், பள்ளிக்கு வெளியே கழிவுகள் கொட்டப்படுவதும் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதாகவும் பள்ளி நிர்வாகம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
500 students and teachers affected by illness! Bengaluru school closed! Two cases of swine flu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.