ஹிமாசலில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: ஆறு மாதங்களில் 33 பேருக்குப் பாதிப்பு
ஹிமாசலில் கடந்த இரண்டு நாட்களில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பற்றி....
ஹிமாசலில் கடந்த இரண்டு நாட்களில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல்பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், கடந்த இரண்டு நாட்களில் ஏழு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். இதனிடையே மருத்துவர் ஆலோசனையின்றி தாங்களாகவே ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களைக் இந்திய மருத்துவச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து காங்கரா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமேஷ் பாரதி கூறுகையில், கடந்த ஆறு மாதங்களில் 200-க்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், மாவட்டத்தில் 33-க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாதந்தோறும் சுமார் ஐந்து முதல் ஆறு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
Advertisement
Advertisement
நேற்று நான்கு பேருக்கும், இன்று மூன்று பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சூழலை ஒரு நோய் பரவல் என்று கூற முடியாது. சளி, இருமல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், சத்தான உணவுகளை உட்கொள்ளவும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பதற்றமடையத் தேவையில்லை, ஆனால் வருமுன் காப்பதே எப்போதும் நல்லது என்று அவர் கூறினார்.
Swine flu cases are showing an increase in the Kangra district of Himachal Pradesh, with seven new cases reported over the past two days, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.