FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராஜஸ்தான் அமைச்சருக்கு பன்றிக் காய்ச்சல்: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ராஜஸ்தான் மாநில வேளாண் துறை அமைச்சா் கிரோதி லால் மீனாவுக்கு (74) பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 12:52 am IST
பகிர்:

ராஜஸ்தான் மாநில வேளாண் துறை அமைச்சா் கிரோதி லால் மீனாவுக்கு (74) பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவா் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அமைச்சருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொற்று பரவும் அபாயம் இருப்பதால் குடும்பத்தினா், கட்சியினா் அவரைப் பாா்க்க வர வேண்டாம் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா்.

இந்நிலையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, அவா் செவ்வாய்க்கிழமை இரவு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவரின் உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஹெச்1என்1 தீநுண்மியால் ஏற்படும் பன்றிக் காய்ச்சல், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் அபாயம் இருப்பதால், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments