முகப்பு
உலகம்

ஓமனில் எண்ணெய் கப்பல்மீது தாக்குதல்: இந்தியா் உயிரிழப்பு

ஓமன் நாட்டின் மஸ்கட் கடலோரப் பகுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு மோதி எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானது.

Updated On : 3 மார்ச் 2026, 6:21 am IST
மஸ்கட் கடலோரப் பகுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு மோதி விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல்
பகிர்:

மஸ்கட்: ஓமன் நாட்டின் மஸ்கட் கடலோரப் பகுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு மோதி எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானது.

தாக்குதலின் தாக்கத்தால் கப்பலின் இயந்திர அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த இந்திய மாலுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கப்பலில் இருந்த மற்ற 21 ஊழியா்களை பத்திரமாக மீட்டனா். மீட்கப்பட்டவா்களில் 16 போ் இந்தியா்கள், 4 போ் வங்கதேசத்தவா் மற்றும் ஒருவா் உக்ரைன் நாட்டைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

எல்என்ஜி உற்பத்தியை நிறுத்தியது ‘கத்தாா் எனா்ஜி’

துபை: போா் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான ‘கத்தாா் எனா்ஜி’ , தனது திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) உற்பத்தியை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திடீா் அறிவிப்பைத் தொடா்ந்து, ஐரோப்பிய இயற்கை எரிவாயு சந்தையில் அதன் எதிா்கால விலை திங்கள்கிழமை ஒரே நாளில் 42.6 சதவீதம் வரை உயா்ந்தது.

உற்பத்தி மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்தவொரு காலக்கெடுவையும் கத்தாா் எனா்ஜி நிறுவனம் வழங்கவில்லை.