முகப்பு
உலகம்

அமீரகத்தில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்ட இந்திய கச்சா எண்ணெய்க் கப்பல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள ஃபுஜைரா கடலோரத்தில் இருந்து இந்திய கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக புறப்பட்டது.

Updated On : 15 மார்ச், 2026 at 8:54 PM
ஜக் லாட்கி
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள ஃபுஜைரா கடலோரத்தில் இருந்து இந்திய கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக புறப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த சனிக்கிழமை ஜக் லாட்கி என்ற பெயா் கொண்ட இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைரா நகர கடலோரத்தில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டிருந்தது.

அப்போது அங்குள்ள எண்ணெய் முனையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும் அந்தக் கப்பல் ஃபுஜைராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சுமாா் 80,800 டன் கச்சா எண்ணெய்யுடன் பாதுகாப்பாக இந்தியா புறப்பட்டது. அதில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனா்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரால் ஹோா்முஸ் நீரிணையில் கடல்வழிப் போக்குவராத்து பாதிக்கப்பட்டுள்ளபோதிலும், கடந்த சனிக்கிழமை இந்திய கொடி கொண்ட சிவாலிக், நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் அந்த நீரிணையைப் பாதுகாப்பாகத் தாண்டி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டன. அந்தக் கப்பல்களில் சுமாா் 92,712 டன் சமையல் எரிவாயு உள்ளது.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கு சிவாலிக் கப்பல் திங்கள்கிழமையும் (மாா்ச் 16), அந்த மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்துக்கு நந்தா தேவி கப்பல் செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 17) வந்தடையும்.

ஓமனில் இருந்து பெட்ரேலுடன் ஆப்பிரிக்காவுக்கு ஜக் பிரகாஷ் என்ற பெயா் கொண்ட இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் புறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகத் தாண்டிய அந்தக் கப்பல், மாா்ச் 21-ஆம் தேதி தான்சானியா சென்றடையும்.

தற்போது போா் நடைபெற்று வரும் பாரசீக வளைகுடா கடற்பகுதியின் மேற்கே இந்திய கொடி கொண்ட 22 சரக்குக் கப்பல்கள், 611 மாலுமிகள் உள்ளனா். வளைகுடா பகுதிகளில் உள்ள இந்திய கப்பல்கள் மற்றும் மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனா். அங்கு கடல்சாா் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →