முகப்பு
உலகம்

99.93% வாக்குகள்... வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜோங் உன் அமோக வெற்றி!

வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜோங் உன் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் பற்றி...

Updated On : 18 மார்ச், 2026 at 4:16 AM
கிம் ஜோங் உன்.
பகிர்:

வட கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்-னின் தொழிலாளர் கட்சி, ஏறக்குறைய முழுமையான ஆதரவுடன், 99.93 சதவிகித வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு கம்யூனிச நாடான வடகொரியா சர்வாதிகாரப் போக்கால் மிகவும் பிரபலம். அணு ஆயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பதற்றமான உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டும் முதல் ஒரு கட்சி ஆட்சி முறையுடன் கிம் ஜோங் உன் தலைமையில் வடகொரியா செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வடகொரியாவில் 15-வது மக்கள் பேரவையின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த மார்ச் 15 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் விவசாயிகள், அதிகாரிகள், அறிஞர்கள் என 687 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரேயொருவர் மட்டும் போட்டியிட்டனர். இதனால், இந்தத் தேர்தலை காட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தல் (“show election”) நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அனைவரும் வியக்கும் விதமாக இந்தத் தேர்தலில் 99.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில், அதிபராகவுள்ள கிம் ஜோங் உன்னின் தொழிலாளர் கட்சி 99.93 சதவிகித வாக்குகளையும் முழு ஆதரவையும் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்வாகவுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99 சதவிகித பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாடுகளிலோ அல்லது கப்பல்களிலோ பணிபுரிவதால் 0.0037 சதவிகித பேரால் மட்டுமே வாக்களிக்க முடியவில்லை என்றும், 0.00003 சதவிகித பேர் வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளனர். வாக்களித்தவர்களில் 99.93 சதவிகித பேர் வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். அதேசமயம் 0.07 சதவிகித பேர் கிம் ஜோங் உன்னுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

1957 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பேரவைத் தேர்தலில் அதிகளவிலான எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →