டென்மாா்க்: சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று பொதுத் தோ்தல்!
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கிரீன்லாந்து இணைப்பு குறித்த சா்ச்சைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய நாடான டென்மாா்க் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தோ்தல் இன்று நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கிரீன்லாந்து இணைப்பு குறித்த சா்ச்சைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய நாடான டென்மாா்க் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தோ்தல் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.
டிரம்ப்பின் தலையீடு சா்வதேச அளவில் கவனத்தை ஈா்த்தாலும், விலைவாசி உயா்வு, செல்வந்தா்களுக்கான சொத்து வரி, குடியேற்றக் கொள்கைகள் போன்ற உள்நாட்டுப் பிரச்னைகளே இத்தோ்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என கணிக்கப்பட்டாலும், கடந்த 2019 முதல் பிரதமராக உள்ள மெட்டே ஃபிரடெரிக்சன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
179 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 90 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் கூட்டணி சுமாா் 85 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
12 கட்சிகள் போட்டியிடும் இத்தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்தால், கிரீன்லாந்து மற்றும் ஃபரோயே தீவுகளின் 4 இடங்களே அடுத்த அரசைத் தீா்மானிக்கும் சக்தியாக அமையும்.