போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!
அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கியுள்ள ஈரான்...
அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்னைகளை 30 நாள்களுக்குள் தீர்க்கவேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை நீட்டிக்காமல் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் ஈரான் புதிய முன்மொழிவை அளித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானின் புதிய முன்மொழிவை தான் பரிசீலித்து வருவதாக நேற்று (மே 2) தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அது அவர்களுடனான உடன்படிக்கை மேற்கொள்ள வழிவகுக்குமா என்பது சந்தேகமே எனத் கூறியிருந்தார்.
ஈரானின் 14 அம்சத் திட்டங்கள் கொண்ட முன்மொழிவில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அமெரிக்காவின் 9 அம்சத் திட்டங்கள் கொண்ட முன்மொழிவிற்கு மறுப்பு தெரிவித்து முன்வைக்கப்பட்ட ஈரானின் முன்மொழிவில், ‘அமெரிக்கா ஈரான் மீதான தடைகளை நீக்கி கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வரவும், ஈரானிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கும், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள் உள்பட அனைத்துப் போர் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறது’ என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்திருந்த நிலையில் பாகிஸ்தான் மூலம் ஈரான் இந்த பதிலை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்துவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் முந்தைய முன்மொழிவை கடந்த வாரம் டிரம்ப் நிராகரித்திருந்தார். இருப்பினும், 3 வாரகால போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
Solution to End War Within 30 Days: Iran Calls on US to Make a Decision
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.