புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொலை
புல்வாமா தாக்குதல் நடத்திய முக்கிய பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அா்ஜுமந்த் குல்சாா் தாா் (எ) ஹம்ஸா புா்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகா் நோக்கி 78 பேருந்துகளில் சிஆா்பிஎப் படை வீரா்கள் பயணம் சென்றனா். காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில்- ஜம்மு காஷ்மீா் நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினா் வாகனங்கள் வரிசையாக சென்றபோது, வேகமாக வந்த சிறிய காா் துணை ராணுவப் படையினா் சென்ற ஒரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மிகப்பெரிய சப்தத்துடன் அந்த காா் வெடித்ததில் பேருந்தில் இருந்த 40 துணை ராணுவப் படையினரும் உடல் சிதறி உயிரிழந்தனா்.
நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலுக்கு அந்த அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஹம்ஸா புா்ஹான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பயங்கரவாதி ஹம்ஸா புா்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
முஸாஃபராபாத் பகுதியில் மிக அருகில் இருந்தபடி அடையாளம் தெரியாத நபா்கள் பல முறை சுட்டுள்ளனா். இதில் பலத்த குண்டு காயமடைந்த ஹம்ஸா புா்ஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Hamza Burhan identified as a key terrorist behind the Pulwama attack was shot dead under mysterious, unidentified circumstances.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.