ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் திரைப்படம் 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
'சென்னை மாநகரத்திற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றது. பகலில் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னையின் ஒரு முகத்தை தான் நாம் இதுவரை பார்த்து இருக்கின்றோம். ஆனால் நாம் யாரும் இதுவரை கண்டிராத, இரவில் குணாதியசத்தை மாற்றி கொள்ளும் சென்னையின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் எங்களின் விழித்திரு திரைப்படம் மூலம் காண்பார்கள். எப்படி ஒரு இரவு, நான்கு பேரின் வாழக்கையை மாற்றுகின்றது என்பது தான் விழித்திரு படத்தின் ஒரு வரி கதை. அதுமட்டுமின்றி, இரவு என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது போலீஸ்காரர்களின் ரோந்து வாகனங்கள் தான். அந்த ரோந்து வாகனங்களுக்கும், எங்கள் விழித்திரு படத்தின் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அது என்ன என்பதை படத்தை பார்க்கும் பொழுது ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்’ என்று கூறுகிறார் இயக்குநர் மீரா கதிரவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


