தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காதலை உதறினார்? ஐ ஆம் சிங்கிள் என நடிகை ஓவியா அறிவிப்பு!

ட்விட்டர் பக்கத்தில் ஓவியா ஒரு குறும்பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது...

News image
Updated On :4 செப்டம்பர் 2017, 11:10 am

DIN

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதினார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான நடிகர் ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார். இதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேற எண்ணினார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஓவியா, காதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது எதிர்பாராத திருப்பம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா அடுத்த நாள் சென்னையில் உள்ள சிட்டி செண்டருக்குச் சென்றார். அங்கு ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ரசிகர்களிடம் உரையாடிய ஓவியா, நிகழ்ச்சி குறித்தும் பேசினார். ஆரவ்வை உண்மையாகவே காதலிக்கிறீர்களா என்கிற கேள்விக்கு ஆரவ்தான் என்னுடைய காதலர். அவர்தான் என் வாழ்க்கை. ஆரவ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார். இதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஓவியா வெளியேறியபிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சந்தர்ப்பங்களில் ஓவியா குறித்து ஆரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் ஓவியாவைத் தான் காதலிக்கவில்லை என்று ஆரவ் உறுதியாகப் பதிலளித்தார்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஓவியா ஒரு குறும்பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: காதல் நிலவரம்: நான் இப்போது சிங்கிளாக உள்ளேன். நிம்மதியாக உள்ளேன் என ஓவியா கூறியுள்ளார். இதையடுத்து ஆரவுடனான காதலை அவர் உதறியுள்ளார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.